Thangame Thangam
திட்ட விதிமுறைகள்மாதம் ரூ.500 ம் மற்றும் 500ன் மடங்காக இத்திட்டத்தில் செலுத்தலாம். ஒவ்வொரு உறுப்பினரும் சீட்டு துவங்கும் தேதியில் இருந்து பிரதி மாதம் அதே தேதிக்குள் தொகையை செலுத்தி விடவேண்டும்.
GST ( தற்போது 3% ) மற்றும் டெலிவரியின் போது இதர அரசு வரிகள் இருந்தால் அந்த தொகையை உறுப்பினரே செலுத்த வேண்டும்.
மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கமாக திருப்பித் தரப்பட மாட்டாது. முதிர்வு காலத்திற்கு பிறகு (11 வது மாதத் தவணை செலுத்திய நாளிலிருந்து 30 நாட்கள் கழித்து) தங்க நாணயங்களாகவோ, 916 BIS ஹால்மார்க் நகைகளாகவோ 100% சேதாரம், செய்கூலி இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.
சேமிப்பு புத்தகத்தை தவற விட்டவர்கள் உடனே நிறுவனத்தில் தெரியப்படுத்தி உரிய ஆவணங்களை ஒப்படைத்து நகல் புத்தகம் (Duplicate) பெற்றுக் கொள்ளலாம் .
இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தும் மாதாந்திர தொகை தங்கமாகவே அப்போதைய மார்க்கெட் விலைக்கு வரவு வைக்கப்படும்.
உறுப்பினர்கள் 11 மாத காலத்தை கட்டாயமாக பூர்த்தி செய்ய வேண்டும். திட்டத்தை பூர்த்தி செய்யாமல் விட்ட உறுப்பினர்களுக்கு செய்கூலி, சேதாரத்தில் 50% தள்ளுபடி கிடைக்காது. சேமித்த தங்க எடைக்கு நகையாக மாற்றும் போது சேதாரம், செய்கூலி வசூலிக்கப்படும்.
நீங்கள் சேமித்த தங்கத்தின் எடையை விட,நீங்கள் எடுக்கும் தங்கத்தின் எடை அதிகமாக இருந்தால், கூடுதல் எடைக்கு மட்டும் சேதாரம், செய்கூலி முழுவதும் வசூலிக்கப்படும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கும், திருத்துவதற்கும் சேர்ப்பதற்கும் அல்லது நீக்குவதற்கும் முழு உரிமை நிறுவனத்திற்கு உண்டு. அனைத்து வழக்குகளும் கோபிசெட்டிபாளையத்திலுள்ள தக்க அதிகாரமுடைய நீதிமன்றங்களின் வரம்பிற்குட்பட்டு அமையும்.